3லட்சத்துக்கும் அதிகமான கோடீஸ்வரர்களை கொண்ட நியூயார்க் நகரம், உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் நமது இந்திய நகரம் இடம்பிடித்திருக்கிறதா? பார்ப்போம்.
உலக பணக்கார நகரங்களின் பட்டியல் வெளியானது
அமெரிக்காவின் நியூயார்க் முதலிடம்; ஜப்பான் 2வது இடம்
இந்தியாவின் நான்கு நகரங்கள் பட்டியலில் இடம்பிடிப்பு
மும்பை – 21; டெல்லி – 36; கொல்கத்தா – 63; ஹைதராபாத் – 65
லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனம், நகரங்களில் வசிக்கும் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் நகரம் எது என்னும் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி 2023 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கு 3 லட்சத்து 40ஆயிரம் கோடீஸ்வரர்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூயார்க்கை தொடர்ந்து 2லட்சத்து 90ஆயிரத்து 300 கோடீஸ்வரர்களுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ இரண்டாவது இடத்தையும், அதனைத் தொடர்ந்து 2லட்சத்து 85ஆயிரம் கோடீஷ்வரர்களுடன் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதிகள் (San Francisco Bay Area) மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
Tokiyo
san francisco
2லட்சத்து 58ஆயிரம் கோடீஸ்வரர்களுடன் லண்டன் இந்த ஆண்டு நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2000-ஆம் ஆண்டில், முதன்மை நகரமாக இருந்த லண்டன், கடந்த 20 ஆண்டுகளில் அது பட்டியலில் பின்தங்கியுள்ளது.
சிங்கப்பூர் இந்த பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது. அங்கு 2லட்சத்து 40ஆயிரத்து 100 கோடீஸ்வரர்கள் வசித்து வருகின்றனர்.
நியூயார்க், தி பே ஏரியா, லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் சிகாகோ ஆகிய நான்கு நகரங்களுடன் இந்தப் பட்டியலில் அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. சீனாவின் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் ஆகிய இரண்டு நகரங்களும் இந்த பட்டியலில் உள்ளன.
சீனா, லண்டனைத் தவிர, முதல் 10 இடங்களில் எந்த ஒரு ஐரோப்பிய நகரமும் இடம்பெறவில்லை.
Mumbai
இந்தியாவை பொறுத்தவரை 59ஆயிரத்து 400 கோடீஸ்வரர்களுடன் மும்பை 21 வது இடத்தையும், 30ஆயிரத்து 200 கோடீஸ்வரர்களுடன் டெல்லி 36 வது இடத்தையும், 12ஆயிரத்து100 கோடீஸ்வரர்களுடன் கொல்கத்தா 63 வது இடத்தையும், 11ஆயிரத்து100 கோடீஸ்வரர்களுடன் ஹைதராபாத் 65 வது இடத்தையும் பிடித்துள்ளன.
– ஆசாத்.
Discussion about this post