தமிழ்நாட்டில் தொடர்ந்து போலி மருத்துவர்கள் பிடிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கடந்த பத்து நாட்களில் மட்டும் 72ற்கும் அதிகமான போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விடியா திமுக ஆட்சியில் போலி மருத்துவர்கள் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து தற்போது கோயமுத்தூரில் ஒரு போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதுவும் அந்த போலி மருத்துவரின் க்ளினிக்கைத் திறந்து வைத்தவர் திமுக எம்.பி ஆ.ராசா என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை மாவட்டத்தில் போலி க்ளினிக்குகள் செயல்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில் இணை இயக்குநர் சந்திரா தலைமையிலான குழு அதிரடி சோதனையில் ஈடுபட்டது. அப்போது காரமடை வெள்ளயங்காடு பகுதியில் இயங்கிவரும் ஜே ஜே க்ளினிக் முறையான அனுமதியின்றி செயல்படுவதாக செய்தி வந்த நிலையில் அந்த க்ளினிக்கை மேற்பார்வையிட்டனர். அப்போது சான்றிதழ் போலி என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அங்கு வேலைப்பார்க்கும் சதீஸ்குமார் மற்றும் புவனேஸ்வரன் ஆகிய இரண்டு மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் பிலிப்பைன்ஸில் மருத்துவம் படித்ததாக கூறியிருக்கிறார்கள். ஆனால் அதற்கான முறையான சான்றிதழ்களும் இல்லை. மேலும் இவர்கள் அந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்த்துள்ளார்கள். மேலும் இந்த க்ளினிக்கின் உரிமையாளர் ஜெயஜோதி என்பவர் தான் என்பது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து காரமடை போலிசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்கள்.
இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் இந்த ஜெயஜோதி என்பவரின் புதிய க்ளினிக்கை ஜனவரி 22ல் மேட்டுப்பாளையத்தில் விடியா திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா திறந்துவைத்துள்ளார். ஏற்கனவே இந்த திமுக ஆட்சியில் போலி மருத்துவர்கள் பல்கிப் பெருகி வருகின்றனர். இதனால் ஏழை மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. இதைக் கருத்தில் கொள்ளாமல் போலி மருத்துவத்திற்கு விதை போடும் செயலாக ஆ.ராசா செய்தது உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
Discussion about this post