அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் :
சமூகநீதி மாநாட்டில் பில்டப் செய்கிறார் ஸ்டாலின். உண்மையில் சமூநீதிக்கு சொந்தம் கொண்டாடக்கூடிய கட்சி அதிமுக தான். சமூகநீதி தான் தமிழ்நாட்டிற்கு உகந்தது என்று எண்ணி எத்தனை திட்டங்களை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்தார்கள். அனைத்து திட்டங்களையும் இந்த விடியா திமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. தாலிக்கு தங்கம், மடிக்கணினி என எத்தனையோ எண்ணற்ர திட்டங்களை இந்த அரசு முடக்கிவிட்டுள்ளது. அதிலும் ஏழை எளிய மக்கள் உண்பதற்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவகத்தில் தரமற்ற உணவினை வழங்கி உண்ண வருபவர்களை பயமுறுத்தும் வேலையில் திமுக அரசு ஈடுபடுகிறது. அவர் பேசிய சமூகநீதி மாநாட்டில் பெரிய தலைவர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. சமூகநீதியைக் காலில் போட்டு மிதிக்கும் தொனியில் செயல்படும் இவர் சமூகநீதி மாநாட்டில் கலந்துகொண்டிருப்பதை இந்த உலகம் வேடிக்கையாகத்தான் பார்க்கும்.
Discussion about this post