தீபாவளி சிறப்புப் பேருந்துகள் சென்னையில் 6 இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்து இருக்கைகளும் பூர்த்தியான பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தாம்பரம், பெருங்களத்தூர் செல்லாமல் மதுரவாயல், பூவிருந்தவல்லி, நசரத்பேட்டை வெளிச்சுற்றுச் சாலை வழியாக வண்டலூர் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
எனவே பயணிகள் தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிறுத்தங்களுக்குப் பதிலாக ஊரப்பாக்கம், கேளம்பாக்கம் தற்காலிக பேருந்து நிறுத்தங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திட்டமிட்டபடி ஆந்திரா செல்லும் பேருந்துகள் இயக்கப்படும் என்றும், கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் செல்லும் பேருந்துகள், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளதாகவும், வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படவுள்ளது.
Discussion about this post