டிவிட்டரின் சிஇஓ-வாக இருக்கும் எலான் மஸ்க் ஒரு வேடிக்கையான மனிதர் என்பது உலகம் அறிந்ததே. இன்று காலையில் இருந்து அவர் செய்திருக்கும் ஒரு வேலை மிகவும் டிரெண்டியாக சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது. டிவிட்டரின் லோகோவான குருவி படத்திற்கு பதிலாக மீம்ஸ்களில் பிரபலமாக இருக்கு சீம்ஸ் நாயின் படத்தினை மாற்றி அமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன் நாய் ஒன்றினை அழைத்து வந்து டிவிட்டர் சிஇஓ நாற்காலியில் அமர வைத்தார். அதுவும் பெரிதாக பேசப்பட்டது. தற்போது இந்த செயலும் நெட்டிசன்களால் அதிகமாக பேசப்பட்டும் மீம்ஸ்களாகவும் பகிரப்பட்டு வருகிறது.
Discussion about this post