நெல்லை உதவி காவல்துறை ஆணையர் பல்வீர் சிங் குற்றவாளியின் பற்களைப் பிடுங்கியது மிகப்பெரிய சர்ச்சையையும், மனித உரிமை மீறலாகவும் பார்க்கப்பட்டது. எனவே மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து பல்வீர் சிங் மீது விசாரணை நடத்தத் திட்டமிட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு மனித உரிமை ஆணையம் சார்பாக சம்மன் அனுப்பி ஆஜர் ஆக உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இன்றைக்கு ஆணையத்திடம் முன்பு ஆஜர் ஆனார். மேலும் மனித உரிமை ஆணைய விசாரணையின் போது இவர் இதற்கு முன் இதேபோலான காரியத்தில் ஈடுபட்டிருக்கிறாரா என்று விசாரித்த போது இதே போல 25 பேர்களின் பற்களை விசாரணையின் போது புடுங்கியுள்ளார் என்ற அதிர்ச்சிக்கரத் தகவல் கிடைத்துள்ளது.
Discussion about this post