கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலின் தேதியானது அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் 224 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே பத்தாம் தேதி நடைபெறும் என்று கர்நாடகா தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் அறிவித்துள்ளார். தற்போது அங்கு பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. ஆட்சிக்காலம் முடிவடையும் நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் தேதியினை அறிவித்துள்ளது. கர்நாகாவில் 5.21 கோடி வாக்களர்கள் உள்ளனர். 16,976 மூத்த வாக்காளர்களும், 2.59 கோடி பெண் வாக்காளர்களும், 4,699 திருநங்கை வாக்காளர்களும், 9.17 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்களும் இதில் அடங்குவர். ஏற்கனவே கடந்தவாரம் காங்கிரஸ் தனது 124 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. பாஜகவினைச் சேர்ந்த கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஏப்ரல் முதல் வாரம் தங்கள் கட்சியின் வேட்பாளர் பட்டியலினை வெளியிடுவதாக தகவல் தெரிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவைக்கு ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி மனு தாக்கல் தொடக்கம், ஏப்ரல் 20ஆம் தேதி மனுதாக்கல் முடிவு, ஏப்ரல் 21 ஆம் தேதி வேட்பு மனு பரிசீலனை, ஏப்ரல் 24 ஆம் தெதி வேட்புமனுவைத் திரும்ப பெற கடைசி நாள் ஆகும். மே 10 ஆம் தேதி நடைபெறும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது மே 13 ஆம் தேதி எண்ணப்படும் என்று சொல்லப்படுகிறது.
Discussion about this post