சட்டபேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், சென்னையில் பெரம்பூர் அதிமுக பிரமுகர் இளங்கோவன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதற்கு அதிமுக சார்பாக கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்தார். பெரம்பூர் பகுதியில் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் புழக்கத்தினைக் கட்டுப்படுத்தும் விதமாக புகார் ஒன்றினை அதிமுகவின் பெரம்பூர் தெற்கு பகுதி செயலாளர் இளங்கோவன் காவல்நிலையத்தில் கொடுத்தார். அதற்காக அவரை மர்மநபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். காவல்துறையினருக்கு இதுபோன்ற போதைப்பொருட்கள் பழக்கம் குறித்த தகவலை தெரிவிப்பவர்களுக்கு உரிய பாதுகாப்பும் அவர்களைப் பற்றிய இரகசியத்தை வெளியிடாமலும் இருக்க வழிவகை செய்ய வேண்டும் என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தீர்மானத்தினை வாசித்தார். மேலும் காவல்துறை இதுபோன்ற புகார்களை உடனடியாக பரிசீலனைக்கு எடுத்து சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று அவர் தீர்மானத்தினைக் கொண்டுவந்தார்.
Discussion about this post