மதுரை விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் குறித்து அவதூறாக பேசிய நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் கொடுத்த கழக இடைக்கால பொதுச்செயலாளர் மீதே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு கழக தேர்தல் பிரிவு துணை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இன்பதுரை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய , கழக தேர்தல் பிரிவு துணை செயலாளர் இன்பதுரை, பாதுகாப்பு நிறைந்த விமான நிலையத்தில் இது போன்ற சம்பவம் நடந்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைவருக்கு எதிராக கருத்து தெரிவித்த நபர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்திருப்பது எந்த வகையில் நியாயம் என்று அவர் கேள்வி எழுப்பினார்.பிரதான கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி குறித்து அவதூறாக பேசியவரை, தடுத்த பாதுகாப்பு அதிகாரி மீது வழிப்பறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதென்றால் காவல்துறை எந்த அளவிற்கு உள்ளது என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்ட இன்பதுரை, எதிர்க்கட்சி தலைவர் குறித்து அவதூறாக பேசியவரை காவல்துறை தப்பிக்க விட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
Discussion about this post