ஆண்டுதோறும் திரைத்துறையில் சாதனை புரிபவர்களுக்கு ஆஸ்கார் விருதானது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் சிறப்பாக சாதனை புரிந்த திரைப்படங்களுக்கு இந்த வருடம் ஆஸ்கார் அளிக்கப்பட்டது. இது தொண்ணூற்று ஐந்தாவது ஆஸ்கார் விருது விழா ஆகும். என்ன என்ன விருதுகளை யார் யார் பெற்றிருக்கிறார்கள் என்பதனைத் தற்போது காண்போம்.
Everything Everywhere All at Once
ஆஸ்கார் விருதின் அதிக விருதுகளை வாங்கியிருக்கும் திரைப்படமாக, டேனியல் க்வான் மற்றும் டேனியல் செய்னெர்ட் ஆகிய இருவரும் இயக்கிய Everything Everywhere All at Once என்கிற திரைப்படமே உள்ளது. இது ஒரு சயின்ஸ் பிக்சன் மற்றும் அட்வென்ஞர் திரைப்படமாக வெளியாகி இரசிகர்களின் மனதினை அதிகமாக கவர்ந்திருந்தது. சிறந்த திரைப்படம்(டேனியல் க்வான், டேனியல் செய்னெர்ட் மற்றும் ஜோனதன் வாங்), சிறந்த நடிகை (மிச்செல்லி யெஓஹ்), சிறந்த துணை நடிகை (ஜெமி லி குர்டிஸ்), சிறந்த இயக்குநர் (டேனியல் க்வான் மற்றும் டேனியல் செய்னெர்ட்), சிறந்த துணை நடிகர் ( கி ஹுய் க்வான்), சிறந்த திரைக்கதை (டேனியல் க்வான் மற்றும் டேனியல் செய்னெர்ட்), சிறந்த படத்தொகுப்பு (பால் ரோஜர்ஸ்) ஆகிய ஏழு பிரிவுகளில் விருதுகளை வாங்கி குவித்திருக்கிறது இத்திரைப்படம். ஆஸ்கார் வரலாற்றில் இது மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
The Whale
சைக்காலஜிகல் திரைப்படமாக வந்த திரைப்படம்தான் The Whale. இத்திரைப்படத்தினை டேரன் அர்னோவ்ஸ்கி என்பவர் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் நடித்த ப்ரெண்டன் ஃப்ரேசர் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார். மேலும் ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்காக ஏட்ரியன் மோரோட், ஜூடி சின், அன்னி மரியா ப்ராட்லி ஆகியோர் ஆஸ்கார் விருதினைப் பெற்றுள்ளார்கள்.
All Quiet on the Western Front
போர் சம்பந்தப்பட்ட ஜெர்மானிய மொழித் திரைப்படமாக வெளியானதுதான் All Quiet on the Western Front. இது ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழியிலும் வெளியானது. 1929 ஆம் ஆண்டு வெளியான All Quiet on the Western Front நாவலினை அடிப்படையாகக் கொண்டே இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. அதனால்தான் நாவலின் பெயரையே திரைப்படத்தின் பெயராக வைத்துள்ளனர். இத்திரைப்படம் சிறந்த சர்வதேச திரைப்படம் (எட்வர்ட் பெர்கர்), சிறந்த இசை ( வோல்கர் பெர்ட்லிமன்), சிறந்த ஒளிப்பதிவு ( ஜேம்ஸ் ஃப்ரெண்ட்), சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு ( கிறிஸ்டின் கோல்ட்பெக், எர்னைஸ்டன் கிப்பர்) ஆகிய விருதுகளை வாங்கியிருக்கிறது. சர்வதேச அளவில் மிகவும் கவனக்குவிப்பையும் இத்திரைப்படம் ஏற்படுத்தியிருக்கிறது.
இதைத் தவிர சிறந்த பாடல் இந்தியாவின் ‘நாட்டு நாட்டு’ பாடலும், சிறந்த ஆவணக் குறும்படமாக ‘த எலிபண்ட் விஸ்பெரர்ஸ்’ திரைப்படம் விருதினைப் பெற்றது. சிறந்த ஆவணத் திரைப்படம் விருதினை ‘நவால்னி’ திரைப்படம் பெற்றது.
ப்ளாக் பேந்தர் : வாகாண்டா பாரவர் திரைப்படமானது சிறந்த ஆடைவடிவமைப்பிற்கான விருதினைப் பெற்றது.
அவதார் : த வே ஆஃப் வாட்டர் திரைப்படம் ஆஸ்காரின் சிறந்த விசுவல் எபெக்ட்ஸ் பிரிவில் விருதினைப் பெற்றுள்ளது.
டாம் க்ரூஸ் நடித்த ‘டாப் கன் : த மேவரிக்’ திரைப்படம் சிறந்த ஒலி என்கிற பிரிவில் விருதினை பெற்றுள்ளது.
உமன் டாக்கிங் என்கிறத் திரைப்படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதினைப் பெற்றது. சிறந்த அனிமேசன் குறும்படம் பிரிவில் ’த பாய், த மோல், த பாஃக்ஸ் அண்ட் த ஹார்ஸ்’ எனும் திரைப்படம் விருது வென்றது. ’த ஐரிஸ் குட்பை’ திரைப்படமானது லைவ் ஆக்சன் குறும்படம் பிரிவில் விருது வென்றது. அதேபோல சிறந்த அனிமேசன் திரைப்படம் விருதினை ‘குல்டெர்மோ டெல் டோரோஸ் பினொச்சி’ எனும் திரைப்படம் வென்றது.
இவையே இந்த வருடத்திற்கான ஆஸ்கார் விருது பெற்றவர்களின் பட்டியல் ஆகும்.
Discussion about this post