செயல் திறன் அற்ற திமுக அரசின் மெத்தனத்தால் சேலம் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு சிகரெட்டுகள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதால், மாணவர்கள் புகை பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். இது தொடர்பான வீடியா காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி உள்ளது. 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு புகையிலை மற்றும் சிகரெட் போன்றவற்றை விற்பனை செய்யக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகர் மரவனேரி பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், பள்ளி சீருடையுடன் அருகில் உள்ள டீக்கடையில் சிகரெட் அடிக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி உள்ளது. பள்ளிகளுக்கு அருகே உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற சட்டம் அமலில் உள்ள போது, செயல்திறன் அற்ற திமுக ஆட்சியில் காவல்துறையினரும், மாநகராட்சி அதிகாரிகளும் இதனை முறையாக கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Discussion about this post