இந்திய கிரிக்கெட் அணியினருக்கு ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம். அப்படிப்பட்ட வீரர் நம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையைப் பற்றிப் புகழ்ந்துள்ளார். வசிம் அக்ரம் தன்னுடைய வாழ்க்கையை புத்தகமாக எழுதி வருகிறார். அதற்கு ‘ சுல்தான் தி மெமோயர்’ என்று பெயரிட்டுள்ளார். அந்நூலில் அவர் தன்னுடைய மனைவி ஹீமா அக்ரம் பற்றி குறிப்பிட்டிருக்கும் பகுதியில் சென்னையைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவி சிறுநீரகத் தொற்றால் 2009 ஆம் ஆண்டு தன்னுடைய 42 வயதில் இறந்தார். தனி விமானத்தில் பாகிஸ்தானிலிருந்து சிங்கப்பூர் தன் மனைவியின் சிகிச்சைக்காக சென்று கொண்டிருக்கையில் எரிபொருள் பற்றாக்குறையால் சென்னை விமானநிலையத்திற்கு வந்ததாகவும், அங்கே தனது மனைவி மயக்கமடைந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அன்றைக்கு எனக்கு விசா கூட இல்லை. பாகிஸ்தான் பாஸ்போர்ட் மட்டுமே வைத்திருந்தேன்.
ஆனால் அங்கிருந்த மக்கள், அதிகாரிகள் என்னை அடையாளம் தெரிந்துகொண்டார்கள். பாஸ்போர்ட், விசா எதுவும் வேண்டாம், உங்களது மனைவியை விரைவில் மருத்துவமனைக்குக் கூட்டி செல்லுங்கள் என்று கூறி என்னை வழியனுப்பினர் என்று சென்னையைப் பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தான் ஹீமா அக்ரமிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது காலம் சிகிச்சையிலிருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு சென்னையிலே அகால மரணமுற்றார். ஆனால் சென்னை மக்கள் அன்றைக்கு எனக்காக உதவியதை நான் மறக்கவே மாட்டேன் என்று அந்தப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் வாசிம் அக்ரம்.
Discussion about this post