ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை ஒட்டி இன்றைக்கு மூன்றாவது நாளாக பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளார் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து இந்த பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித்தலைவர், வெற்றிச் சின்னமான இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார். அப்போது கூட்டத்தில் அழுதுகொண்டிருந்த குழந்தையை கையில் ஏந்தி அக்குழந்தையை கன்னத்தோடு கன்னம் ஒற்றிக் கொஞ்சினார். கூட்டமே மகிழ்ச்சியாய் ஆராவரம் செய்தது.
Discussion about this post