ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து கழகத்தின் இடைக்கால பொதுசெயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தொடக்கமாக இன்றைக்கு ஈரோடு கிழக்குத் தொகுதியில் அக்ரஹாரம் பகுதியின் கனிராவுத்தர் குளம் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பினை நல்கி வருகின்றனர். கழக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றியினை தரும்படி மக்களைக் கேட்டுக்கொண்டார்.
நம்முடைய சின்னம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சின்னம், புரட்சித் தலைவி அம்மாவின் சின்னம், ஏழை எளிய மக்களின் சின்னம் இரட்டை இலை என்று கூறி தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். இன்றைக்கு திமுக ஆட்சி பொறுப்பேற்று 21 மாத கால ஆட்சியில் மக்களுக்கு எந்த நலத் திட்டமும் செய்யவில்லை. முக்கியமாக ஈரோட்டு மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. கே.எஸ். தென்னரசு அவர்கள் எம்.எல்.ஏ வாக இருந்தபோது இங்கு அதிமுக அரசினால் பல நலத்திட்டங்கள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறது. முக்கியமாக பாதுகாக்கப்பட்ட காவிரி குடி தண்ணீர் வழங்கினோம். சுமார் 28 கி,மீட்டரில் இருந்து நீர் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஈரோட்டிற்கு சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிக்கொடுக்கப்பட்டது என்று எதிர்கட்சித் தலைவர் பேசினார். இந்த கனிராவுத்தர் குளத்தினை பராமரிக்க 6 கோடி ரூபாய் அதிமுக ஆட்சியில் ஒதுக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் இங்கு கொண்டுவரப்பட்ட புறவழிச்சாலை பணியினை திமுக தொடராமல் கிடைப்பில் போட்டுவிட்டது.
ஸ்டாலினின் உத்தரவின் பேரில் 25 அமைச்சர்கள் ஈரோடு பகுதியில் முகாமிட்டு வீதிவீதியாக போய் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு கேட்கிறார்கள். இந்தத் தொகுதிக்கு அந்த அமைச்சர்கள் எதுவும் செய்யவில்லை. மேலும் கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கையை மட்டும் சொல்லிவிட்டு எதையும் நிறைவேற்றாமல் இருக்கிறார். 520 அறிப்புகள் அறிவித்து எதையுமே அவர் நிறைவேற்றவில்லை. இதில் 85% நிறைவேற்றிவிட்டோம் என்று முழு பூசணியினை சோற்றில் மறைக்கிறார் ஸ்டாலின். பொங்கல் தொகுப்பில் கூட ஊழல். வெள்ளத்தினைக் கூட பயன்படுத்த முடியவில்லை. பைக்கட்டில் ஒழுகிக்கொண்டே போகிறது. மேலும் மின்கட்டணம் உயர்ந்துவிட்டது. வீட்டு வரி 100%, கடை வரி 150% என்று அதிகரித்துள்ளது. மக்கள் திமுகவிற்கு ஓட்டுப்போட்டதற்கு தக்க பரிசினைக் கொடுத்துள்ளது. விலைவாசி உயர்ந்துள்ளது. இதனை தடுக்க திமுக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. செங்கல், ஜல்லி, மணல் என்று எல்லாவித கட்டுமான பொருட்களின் விலையும் எகிறிவிட்டது. இதையெல்லாம் திமுக கண்டுகொள்ளவில்லை என்று விமர்சனம் செய்தார் எதிர்கட்சித் தலைவர்.
Discussion about this post