தென்னை விவசாயிகளுக்கு காண்டாமிருக வண்டுகளை ஒழிக்க, மானிய விலையில் “ரைனோலூர்” இனக்கவர்ச்சிப் பொறி வழங்கப்படுகிறது. வேளாண்துறை இந்த பொறியை, “கிரீனிகான் அக்ரோடெக்” என்ற சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்திடம் இருந்து, ஆயிரத்து 400 அடக்கவிலை மற்றும் ஜி.எஸ்.டி. 252 ரூபாய் சேர்த்து, ஒரு பொறியை ஆயிரத்து 652 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. இதில், அடக்கவிலை ஆயிரத்து 400 ரூபாயில் 50 சதவீத மானியமாக, 700 ரூபாய் மற்றும் ஜி.எஸ்.டி. 252 ரூபாய் சேர்த்து, விவசாயிகளுக்கு 952 ரூபாய்க்கு, வேளாண்துறை விற்பனை செய்கிறது. இந்நிலையில், இந்த இனக்கவர்ச்சிப் பொறி சந்தையில், 360 முதல் 450 ரூபாய் வரை கிடைக்கிறது என்றும், ஆனால், அதை விட 4 மடங்கு அதிகமான விலையில், வேளாண்துறை விவசாயிகளுக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விடியா ஆட்சியில், மானியம் என்ற பெயரில், அரசின் கஜானாவைக் காலி செய்து, யாரின் “பாக்கெட்டையோ” நிரப்புகின்றனர் என்று குற்றம்சாட்டியுள்ள விவசாயிகள், இதில் நடந்துள்ள ஊழல் குறித்து, முறையாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
Discussion about this post