மதுரை – திருமங்கலம் இடையே பதினேழு புள்ளி மூன்று இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் ரயில் தட அதிவேக சோதனை நடத்தப்பட்டது. பெங்களூருவில் இருந்து வந்திருந்த தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், ரயில் தட சோதனை மேற்கொண்டார். முதற்கட்டமாக மதுரை-திருமங்கலம் இடையே காலை 09.30 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மோட்டார் டிராலி மூலம் ஆய்வு நடைபெற்றது. பிற்பகல் 2.40 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து மதுரைக்கு நவீன கருவிகள் பொருத்தப்பட்ட சிறப்பு ஆய்வு வண்டி மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில்
இயக்கி சோதனை நடத்தப்பட்டது. இந்த புதிய இரட்டை பாதையில் செய்யப்பட்டுள்ள மின்மயமாக்கல் ஏற்பாடுகளை தெற்கு ரயில்வே தலைமை முதன்மை மின் பொறியாளர் ஏ.கே.சித்தார்த்தா, செவ்வாய்க்கிழமை அன்று ஆய்வு செய்ய இருக்கிறார். இந்த பாதை பயன்பாட்டிற்கு வந்தால் மதுரை-கன்னியாகுமரி இடையே ரயில்கள் தட நெரிசல் இன்றி இயக்க வாய்ப்பு ஏற்படும்.
Discussion about this post