நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை, முத்தரசபுரத்தில் பல ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் சடலங்களை வயலில் தூக்கி செல்வதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சடலங்களை தூக்கி செல்வதாகவும், நிரந்தர சுடுகாடு கட்டிடம் கூட இல்லாமல், அவ்வப்போது கீற்று கொட்டகைகள் அமைத்து சடலங்களை எரியூட்டும் அவலநிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், மழைக்காலங்களில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை தூக்கி செல்வதாக கூறும் கிராம மக்கள், சமூக நீதி பேசும் திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சுடுகாட்டிற்கு பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post