ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் உரையாற்றினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் மறைவுக்குப் பிறகு இரட்டை இலை சின்னம் சார்ந்த பிரச்சனை எழுந்தது. அப்போது இரட்டை இலையை அதிமுகவிற்கு மீட்டுக் கொடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் என்று கே.எஸ். தென்னரசு பேசினார். தற்போது இப்போதும் அதே போல சின்னம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டபோது அதனைத் தீர்த்து வைத்து சின்னத்தினை மீட்டவர் இடைக்கால பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் என்று கே.எஸ். தென்னரசு பேசினார்.
தொடர்ந்து பேசிய தென்னரசு அவர்கள், விடியா திமுக ஆட்சியில் எந்தவித நலத் திட்டங்களும் நிறைவேற்றமால் மக்களை அலைக்கழிக்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார். மேலும் பொங்கல் பரிசுத் தொகையினைக் கூட ஸ்டாலினால் ஒழுங்காக மக்களுக்கு தர முடியவில்லை என்று விமர்சித்தார். பொங்கல் பரிசில் கரும்பினைக்கூட அறிவிக்காமல் ஸ்டாலின் இருந்தார். எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், கரும்புத் தரவில்லையென்றால் திருவண்ணாமலையில் 5 லட்சம் பேர் விவசாயிகளைக் கூட்டி போராடுவேன் என்று அறிவித்தப் பிறகு ஸ்டாலின் பொங்கல் பரிசில் கரும்பு உண்டு என்று அறிவிப்பு செய்கிறார். முதியோர் பென்சனைக் குறைத்துள்ளார், குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் பணம் தருகிறேன் என்று சொல்லி அதையும் செயல்படுத்தாமல் ஏமாற்றியுள்ளார் என்று தொடர்ந்து பேசினார் கே.எஸ். தென்னரசு.
Discussion about this post