“ஒரே நாடு ஒரே தேர்தல்” எனும் முறைக்கு மத்திய அரசு தயாராகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. நடப்பு ஆண்டில் 9 மாநில சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும், அடுத்த ஆண்டில் 7 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் என மொத்தம் 16 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் 2 ஆண்டுகளில் நடைபெற உள்ளது. மத்திய அரசின் பணியை குறைக்கும் வகையிலும், பாதுகாப்பு பணியை எளிமையாக்கும் வகையிலும் 16 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தலையும் 2024வது மக்களவை தேர்தலோடு நடத்த உத்தரவிடக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சதீஷ் சந்திர ஷர்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, மனு நீதிமன்ற வரம்பிற்குள் வராது எனவும், மனுதாரரின் கோரிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தின் கீழ் வரக்கூடியது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Discussion about this post