துருக்கி- சிரியா எல்லையில் அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியின் காசியண்டெப் நகர் அருகே 17 கிலோ மீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் உள்ள ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்ட நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் இதுவரை 900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படும் நிலையில், இடிபாடுகளுக்கும் மேலும் பலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, துருக்கியில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையடைந்துள்ளதாகவும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் துருக்கி நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய இந்தியா தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post