சென்னையில் தனியார் நிறுவன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நடிகர் சிவக்குமார், செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது சபரிமலையில் பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்றார். இதனிடையே பெண்களை அனுமதிக்க பெண்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.
அப்போது ஆவேசமடைந்த சிவக்குமார், யோவ், அவங்க உங்க அம்மா, தங்கச்சி தான் யா.. உன் தங்கச்சி கோயிலுக்கு போறத யாராலும் தடுக்க முடியாது. என்றார். மீ டூ விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியபோது, அதுபற்றி தனியாக பேசலாம். கேமரா முன்பு பேச முடியாது என்றார்.
Discussion about this post