திரைப்பட எழுத்தாளரும், இயக்குனருமான இ.ராமதாஸ் இல்ல திருமண விழாவில் கலந்துக்கொள்ள நடிகர் சிவக்குமார் வருகை தந்தப் போது அவருடன் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது அவரது செல்போனை சிவக்குமார் அசால்ட்டாக தட்டி விட்டார். இதில் அந்த நபரின் செல்போன் சேதமடைந்தது. நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பலரும் சிவக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டனங்களையும், மீம்ஸ்களையும் போட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து சிவக்குமார் தரப்பு பதில் அளிக்காத நிலையில், இயக்குனர் ராமதாஸ் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார் .அதில், ” ஏதோ ஒரு அசாதாரண தருணத்தில் செல்ஃபி எடுப்பவரின் போனை சிவக்குமார் தட்டி விட்ட செயல் நடந்துவிட்டது. இந்த நிகழ்வு தற்சமயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இச்சம்பவம் நிகழ்ந்தது என் வீட்டு திருமண நிகழ்வாக இருப்பதால், இதனைப் பெரிதுப்படுத்த வேண்டாம்”என்று குறிப்பிட்டுள்ளார்.சிவக்குமார் கலந்துக்கொண்ட இந்த திருமண நிகழ்வின் புகைப்படங்களும் வேகமாக பகிரப்பட்டு வரப்படுகிறது.
அதேசமயம் போன வருஷம் தான் மதுரையில் இப்படி செல்ஃபி எடுக்க வந்தவரோட போனை தட்டி விட்டு அவருக்கு புது போன் வாங்கி கொடுத்தாரு. இந்த வருஷம் ஆரம்பமே இப்படியான்னு சிவக்குமார் தரப்பு செம அப்செட்.
Discussion about this post