விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜர் ஆனார். கடந்த முறை திமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி ஆதிலட்சுமி ஆகியோர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணையில் திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜர் ஆனார்.
Discussion about this post