பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவுநாளையொட்டி சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின், திருஉருவ படத்திற்கு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 54 வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் திருஉருவ படத்திற்கு கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மேலும் பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு நாளையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனையொட்டி சென்னை காமராசர் சாலையிலுள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் கழக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், கழக அமைப்பு செயலாளர் பொன்னையன், கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர்.விஜயகுமார், ஜெயவர்த்தன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தி.நகர் சத்யா, மாவட்ட கழக செயலாளர்கள் பாலகங்கா, வெங்கடேஸ் பாபு, விருகை ரவி, ஆதி ராஜாராம், கே.பி.கந்தன், ஆர்.எஸ்.ராஜேஷ், வேளச்சேரி அசோக், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் கழக மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
Discussion about this post