மேல்மாந்தை ஊராட்சி வேலாயுதபுரம் கிராமத்தில் மயான சாலை அமைக்க டெண்டர் கோரமல் இருந்துள்ளது. இந்த நிலையில், போடப்படாத சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டு, சாலை போடப்பட்டதாக கூறி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தவறான தகவல் அளித்துள்ளனர். இந்த நிலையில் போடப்படாத சாலைக்கு 5 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி பெற்று மோசடி நடைபெற்றுள்ளதாக கூறி தவறான செய்தி சமூக வலைத்தலங்களில் பரவியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக ஊராட்சி மன்றத்தலைவர் மல்லிகா வேதனை தெரிவித்துள்ளார். தவறான தகவல் அனுப்பியவர்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடுக்கப்போவதாகவும் கூறியுள்ளார். விடியா திமுக ஆட்சியில் நிர்வாக திறமையற்ற அதிகாரிகளால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Discussion about this post