செஞ்சி-சிங்கவரம் சாலை வழியே புதுச்சேரி- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த உயர்மட்ட மேம்பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதால் கரும்புகளை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் மாற்று வழியில் 30 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. 14 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தை 25 அடியாக உயர்த்த வேண்டும் என வருவாய் வட்டாட்சியரிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். தொடந்து14 அடி உயரத்திலேயே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு விடியா திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
Discussion about this post