மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள மன்னாடிமங்கலம் கிராமத்தை சேர்ந்த அன்னலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு கட்ட அவரது கணவர் ஊராட்சி செயலாளர் அலுவலருக்கு 30 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக வழங்கியுள்ளார். கட்டுமான பணி தொடங்கும் முன்பே அவர் இறந்து விட்டதால் வீடு கட்ட ஊராட்சி செயலாளரை அணுகிய போது பணம் எதுவும் வாங்கவில்லை எனக் கூறி மேலும் 20 ஆயிரம் பணத்தை பெற்றுச் சென்றுள்ளார். தற்போது வரை வீடு கட்டுவதற்கு எந்த கட்டுமான பொருட்களும் பணமும் வழங்கவில்லை என கூறியுள்ளார். மத்திய அரசின் திட்டத்தில் லஞ்சம் வாங்கி மோசடி செய்த பணத்தையும், மேலும் வீட்டின் முழு கட்டுமான பணிக்கு தேவையான பணம் மற்றும் பொருட்களை வழங்க வேண்டும் என்றும், ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
Discussion about this post