72 வார்டுகளாக இருந்த மதுரை மாநகராட்சி கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 100 வார்டுகளாக தரம் உயர்த்தப்பட்டது. மேலும் மதுரை மாநகரை அழகுற செய்வதற்காக மத்திய அரசு நிதி உதவியுடன் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. பெரும்பாலான பணிகள் முந்தைய அதிமுக ஆட்சியிலையே நிறைவடைந்த நிலையில் சில பணிகளை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விடியா திமுக அரசு மேற்கொள்ளவில்லை. குறிப்பாக செல்லூர் முதல் குலமங்களம் வரையிலான சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதியில் பயணிக்கும் மக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலைகள் அதிமுக கவுன்சிலர்களின் வார்டுகளில் வருவதால் திட்டமிட்டு விடியா திமுக அரசு புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Discussion about this post