உலகிலேயே முதல் முறையாக கனடாவில் கஞ்சா விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொழுதுபோக்கு உபயோகத்திற்காக கஞ்சாவை சட்ட பூர்வமாக விற்பனை செய்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கனடாவின் கிழக்கு மாகாணமான நியூஃபவுண்ட்லேண்டிலும், லாப்ராடூரிலும் வசிக்கும் மக்கள் கஞ்சா விற்பனையை அதிகாரபூர்வமாக்கிய செய்தியைக் கேட்டு துள்ளிக் குதித்துள்ளனர்.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு முழுவதும் இருந்த தடை நீங்கியதன் மூலம் வயது வந்த கனடிய மக்கள் சட்டபூர்வமாக கஞ்சாவைப் புகைக்க முடியும். டொராண்டோ மற்றும் வான்கூவர் போன்ற மிகப்பெரிய நகரங்களில் கஞ்சா விற்பனைக்கென்று தனியாக எந்தக் கடையும் இல்லை.
நுகர்வோர்கள் ஆன்லைனில் பதிவு செய்து மாகாண அரசாங்கங்கள் அல்லது உரிமம் பெற்ற சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து வாங்கலாம்.
Discussion about this post