பட்ஜெட் கூட்டத்தொடரையொட்டி நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகளின் குரலை மதிப்பதாகவும், கூட்டத்தொடரில் ஒருமித்த கருத்துகளுடன் ஆக்கப்பூர்வமான விவாதம் தேவை எனவும் வலியுறுத்தியுள்ளார். நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டை இந்தியா மட்டுமல்லாமல், உலகமே உற்றுநோக்குவதாகவும், நாட்டின் வளர்ச்சி சார்ந்த அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் பிரதமர் மோடி கூறினார். பழங்குடியினத்தை சேர்ந்த குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு நாடாளுமன்றத்தில் உரையாற்றியது மிகப்பெரிய கவுரவம் என தெரிவித்த அவர், நமது குடியரசுத்தலைவரை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும் என கூறினார்.
Discussion about this post