மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் இருந்து மும்பை நோக்கி இண்டிகோ விமானம் புறப்பட்டது. விமானம், மும்பை விமான நிலையம் வந்த போது, பயணி ஒருவர் விமானத்தின் அவசர கால கதவை திறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட விமான ஊழியர்கள் பைலட்டிற்கு தகவல் தெரிவித்து அந்த பயணியை தடுத்து நிறுத்தினர். இதனையாடுத்து விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரையிறக்கப்பட்டது. இதை தொடர்ந்து, விமான அவசர கால கதவை திறக்க முயற்சித்த நபர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Discussion about this post