சேலம் மாவட்டம் திருமலைகிரி எனும் பகுதியில் நடைபெற உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவிற்காக அந்தப் பகுதிமக்கள் ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இந்தக் கோவிலை குறிப்பிட்ட ஒரு சமூகத்தைச் சேர்ந்தவர்களெ அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார்கள். மேலும் இந்தக் கோவில் இந்து சமய அறநிலையத் துறைக்கு கீழ் செயல்படுகிறது.
ஒரு சமூகத்தினைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இக்கோவிலின் மீது ஆதிக்கம் செலுத்தி வருவதாக ஏற்கனவே சில குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கிறது. அதன் காரணமாக இந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று அந்தப் பகுதியில் உள்ள பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்தக் கோவிலுக்குள் நுழைந்ததாக கூறி அங்கிருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் அவர்மீது குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து திருமலைகிரி பகுதியின் திமுக ஒன்றிய செயலாளர் மாணிக்கம் என்பவர் அந்த இளைஞரைப் பொதுவெளியில் அழைத்து வந்து, பொதுமக்களின் முன்னிலையில் ஆபாச வார்த்தைகளால் சரமாரியாகத் திட்டியுள்ளார். மேலும் அந்த இளைஞரைத் தாக்கவும் முற்பட்டுள்ளார். பிறகு அந்த இளைஞரின் தந்தையையும் ஆபாசமாக திட்டியுள்ளார். அவர் திட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது.
சமூகநீதி, தீண்டாமை ஒழிப்பு போன்றவைகள்தான் எங்கள் கொள்கை என்று பீற்றிக்கொள்ளும் திமுக, அவர்களின் கொள்கைகளை நிர்வாகிகளுக்கு சொல்லித் தந்திருக்காதுபோல. பொய்யானக் கொள்கைகளையும் வாக்குறுதிகளையும் கொடுத்து மக்களை ஏமாற்றி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து இருப்பது தமிழகத்தின் சாபக்கேடு.
Discussion about this post