தமிழ்நாட்டில், சட்டம் – ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருப்பதால், அதன் நிலைமையை மதிப்பிடுவதற்காக, கடந்த 19ம் தேதி மூத்த காவல்துறை அதிகாரிளுடன் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 2019ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்தை விட 2022ம் ஆண்டில் திமுக ஆட்சியில், திருப்பூர், கோவை, கடலூர் மற்றும் தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடுமையான குற்ற வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை, வழிப்பறி, செயின் பறிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் உள்ளிட்ட வழக்குகள் காவல்நிலையத்தில் அதிகளவில் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் வெளிப்பாடாக, அனைத்து நகரங்கள், மாவட்டங்களில் பதிவாகியுள்ள கடுமையான குற்றங்கள் குறித்த விவரங்களை முதல்வர் ஸ்டாலின் அறிக்கையாக கோரியுள்ளார். இதன் மூலம் விடியா திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு எந்தளவுக்கு சீர்கெட்டுள்ளது என்பது வெட்ட வெளிச்சாமாகி உள்ளது.
Discussion about this post