கொசப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரான பிரகாஷ் ஏற்பாட்டில் 16 ஏக்கர் அரசு நிலத்தில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கொசபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ் புறக்கணிக்கப்பட்டதாகவும், சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி அவரை தள்ளி விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த திமுக ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ், அந்த கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் பிராகாஷிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவரை கீழே அழைத்து வந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Discussion about this post