பெல்ஜியம் சென்றிருக்கும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசுகிறார்.
12-வது ஆசிய ஐரோப்பிய நாடுகளின் மாநாடு பெல்ஜியம் நாட்டின் பிரஸ்சல்ஸ் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக சென்றிருக்கும் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
குறிப்பாக பெல்ஜியம் பிரதமர் சார்லஸ் மைக்கேலை சந்தித்து பேசும் அவர், பொருளாதாரம், கலாச்சாரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க உள்ளார்.
Discussion about this post