ஆலைக்கழிவுகள், தோல்கழிவுகள், சாயக் கழிவுகள் போன்றவை, ஆறுகளில் கலக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள ஒத்தகுதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா பொறியல் கல்லூரியில் மாதிரி மின் உற்பத்தி ஆலையை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீபாவளிக்கு, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் புகையில்லா பட்டாசுகளை வெடிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.
ஆலைக்கழிவுகள், தோல்கழிவுகள், சாயக் கழிவுகள் போன்றவை, ஆறுகளில் கலக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தடைசெய்வது குறித்த ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்தெந்த பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தலாம், எதை பயன்படுத்தக்கூடாது என்ற அறிவிப்பு ஜனவரி 1-ம் தேதி வெளியாகும் எனவும் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.
Discussion about this post