நாகை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி மேற்கொண்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமடைந்து உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு சென்று கொள்முதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு 1 ரூபாய் வீதம் முட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் பெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சூழலில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் நிலையங்களில் கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் பெறுவதால் 350 கோடி வரை விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் கொள்முதல் செய்யப்படும் மூட்டைகளில் கூடுதலாக எடை வைப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
Discussion about this post