தமிழக அரசு டாஸ்மாக் நிறுவனத்திற்கு பண்டிகை கால விடுமுறையின் போது, விற்பனை இலக்கு வைத்து வசூலை அதிகரிப்பது வாடிக்கை. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை காலத்தில் 600 கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகி உள்ளது. இந்த மாதம் பொங்கல் பண்டிகைக்கு தொடர்ச்சியாக 14ம் தேதியில் இருந்து தொடர் விடுமுறை விடப்பட்டது. இந்த காலகட்டத்தில், மதுக்கடைகளில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு மதுவகைகள் விற்பனை ஆகி உள்ளதாக, டாஸ்மாக் நிர்வாகத்த தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரம் மாவட்டம் அதிக மது விற்பனையில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னைக்கு அடுத்த இடம் கிடைத்துள்ளது. விடியா திமுக ஆட்சியில் மதுக்கடைகள் அதிகரித்துமதுபிரியர்கள் கணக்கில்லாமல் பெருகிவிட்டனர். இலக்கு வைத்து வியாபாரம் செய்வதால்அரசுக்குவருமானம் வருகிறது. ஆனால் குடிமகன்களின் இல்லங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. மதுக்கடை வாசல்களில் அமர்ந்து குடிக்கும் மதுபிரியர்களால் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதுடன், மதுக்கடைகளுக்கு அருகே உள்ள குடியிருப்புகளில் வசிக்கும் பெண்கள் நடந்துசெல்ல முடியாத நிலையும் உள்ளது.
Discussion about this post