விழுப்புரம் தொகுதி அதிமுக சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் 106வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் அவர்கள் கலந்துகொண்டார். நிகழ்வில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பேசுகையில், பணம் வசூலித்து கொடுக்கும் புரோக்கர்களாக மட்டுமே விடியா அரசின் திமுக அமைச்சர்கள் உள்ளதாக விமர்சித்தார்.
பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று மக்களுக்கு எந்தவித புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்யவில்லை என்றும், தைரியம் இருந்தால் நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்று புதிய திட்டங்களை மக்கள் நலனிற்காக உருவாக்கி செயல்படுத்தியிருக்கிறோம் என்று அவர்களால் கூறமுடியுமா?, எந்த திட்டமும் சரிவர செயல்படுத்தவில்லை, மக்களைப் பற்றித் துளியும் அக்கறையில்லை, சிந்தனையில்லை, அவர்களின் எண்ணமெல்லாம் இருக்கிற ஆட்சிகாலத்தில் எப்படி கொள்ளையடிக்கலாம் என்ற சிந்தனையிலே இருக்கிறது, விடியா திமுக ஆட்சியில் அமைச்சர்கள் அமைச்சர்களாக செயல்படாமல் பணம் வசூ;லிக்கும் புரோக்கர்களாக செயல்படுகிறார்கள் என்று தொடர்ந்து விமர்சித்தார். மேலும் விமர்சித்த அவர். நீட் தேர்வினை தாங்கள் பதவியேற்றவுடன் ரத்து செய்கிறோம் என்று சொல்லிவிட்டு அதனை நிறைவேற்றாமல் மாணவ மாணவிகளின் வாழ்க்கையில் திமுக அரசு விளையாடுகிறது என்று அவர் பேசினார்.
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அவர்கள், திமுகவின் ஆட்சியில் சட்ட ஒழுங்கு மிகவும் கெட்டுப்போய்விட்டது, மேலும் பாலியல் அத்துமீறல்களும் கற்பழிப்பு போன்றவைகளும் தொடர்ந்து அரங்கேறுகிறது என்று விமர்சனம் செய்தார். தமிழகத்தை கண்டுகொள்ளாத இந்த விடியா ஆட்சியில் அமைச்சர்கள் தூங்குகிறார்கள் என்றும், அமைச்சர்களின் அலுவலகங்கள் எப்ப்பொதுமே பூட்டியே உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.
மேற்கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அவர்கள், தமிழக முதல்வரான விடியா திமுக அரசின் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார். சட்டசபையில் தமிழக ஆளுநருக்கு உரிய மரியாதை கொடுக்காமலும், மேடைகளில் ஒருமையில் பேசியும் உள்ள ஸ்டாலின் கலவரக்காரரைப் போல் செயல்படுகிறார். தமிழகத்தில் கலவரத்தைத் தூண்டுகின்ற முதல் குற்றவாளியே முதல்வர் ஸ்டாலின் தான் என்று முன்னாள் அமைச்சர் விமர்சித்தார்.
Discussion about this post