தமிழக அரசால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Tea Mate ஆவின் பாலின் விலை, ரூ.12 அதிகமாக விற்பனை செய்யப்படுவதற்கு கால்நடை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆவின் பால் விலையைக் குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கண்துடைப்புக்காக 3 ரூபாயை குறைத்துவிட்டு, தற்போது அறிமுகம் செய்துள்ள புதிய ஆவின் பாலின் விலையை 12 ரூபாயாக உயர்த்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியான, லிட்டருக்கு 3 ரூபாயைக் குறைத்ததால் ஆவினுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆவின் நிர்வாகத்திற்கு ஏற்படும் இழப்பை சமாளிக்கவே புதிய பால் அறிமுகம் என்ற பெயரில் அரை லிட்டர் ’Tea Mate’ என்ற ஆவின்பாலை 30 ரூபாய்க்கு அறிமுகம் செய்துள்ளது.
இது 6.5 விழுக்காடு கொழுப்பு செறிவூட்டப்பட்ட பால் என்ற விளம்பரத்தோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆரஞ்சு நிற ஆவின் பால், 6 விழுக்காடு செறிவூட்டப்பட்ட கொழுப்புடன் 24 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், வெறும் 0.5 விழுக்காடு கொழுப்பை மட்டும் அதிகரித்துவிட்டு ஆறு ரூபாய் விலையை உயர்த்தியிருப்பதற்கு கால்நடை விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Discussion about this post