கோவை அருகே சிங்காநல்லூரில் பாழடைந்து சிதிலமடைந்து காட்சியளிக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளை சரிசெய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
35 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிங்காநல்லூர் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள் தற்போது பழுதடைந்து, மக்கள் வசிக்க தகுதி இல்லாத இடமாக காட்சி அளிக்கிறது.
இதனால் இங்கு வசிக்கும் தொள்ளாயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்போர் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் இப்பகுதியை பார்வையிட்ட அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, முத்துசாமி உள்ளிட்டோர் புதிய கட்டடம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்ததாகவும்,
ஆனால் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர். உயிர்சேதம் நிகழும் முன்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post