சென்னையில், சுகாதாரத்துறை அமைச்சரின் இல்லம் அருகே, குடிநீர் மற்றும் மழைநீரோடு சாக்கடை கழிவுநீர் கலந்ததால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சைதாப்பேட்டையின் திவான்பாஷ்யம் தெருவில்,11 நாட்களாக மழைநீரோடு கழிவுநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மழை நின்ற பிறகும் சென்னை மாநகராட்சி எந்தவிதமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாததால், டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இல்லத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள இடத்தில்தான் இப்படி மழைநீரும் கழிவுநீரும் தேங்கி நிற்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சாலைகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் வாகனங்களில் செல்ல முடியவில்லை என்றும், நடந்து சென்றால் கால் அரிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post