மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு கைதான நைஜீரியர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், தலைறைவான மேலும் 2 பேரின் பாஸ்போர்ட்களை முடக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேட்ரிமோனியல் வெப்சைட்டில் வரன் பார்த்த சென்னை பெண்ணிடம் 3 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த இளைஞர்கள் 2 பேரை, சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
“ஆப்ரேஷன் D” என்ற பெயரில் தனிப்படை அமைத்து, டெல்லியில் பதுங்கி இருந்த நைஜீரியர்களை போலீசார் பிடித்தனர்.
தலைமறைவான மேலும் 2 நைஜீரியர்களை அவர்கள் தேடி வருகின்றனர். இந்த நிலையில், கைதான 2 நைஜீரியர்கள் மோசடி பணத்தை வேறு சில வங்கி கணக்குகளுக்கு மாற்றம் செய்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நைஜீரியர்களின் 4 வங்கி கணக்குகளை சைபர் கிரைம் போலீசார் முடக்கியுள்ளனர். கைதானவர்கள், 17 வங்கி கணக்குகளை பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. தப்பி ஓடிய 2 நைஜீரியர்களில் ஒருவர் பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
Discussion about this post