சென்னையில், அதிநவீன ரோந்துக் கப்பல், ஐ.சி.ஜி விக்ரஹா-வை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தார்.
சென்னை எல் அன்ட் டி கப்பல் தொழிற்சாலையால் உருவாக்கப்பட்ட 7-வது ரோந்துக் கப்பல் ‘விக்ரஹா’, கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பங்கேற்று, கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து, அதன் ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார். அப்போது, இந்திய கடலோர காவல்படையின் தலைமை இயக்குனர் நடராஜன், கிழக்கு பிராந்திய ஐ.ஜி., ஆனந்த் படோலா உட்பட பலர் உடன் இருந்தனர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், 2008-ம் ஆண்டில் மும்பை தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் கடல்வழியில் எந்த தீவிரவாத ஊடுருவலும் இல்லை என்று தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் இந்திய கடற்படையால் மீட்கப்பட்டதைக் குறிப்பிட்ட ராஜ்நாத்சிங், பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்வதில் நாம் அதிக ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post