காதல் தோல்வியால் நண்பன் தூக்கிட்டு இறந்த துக்கம் தாளாமல் அவரது நண்பனும் தற்கொலைக்கு முயற்சித்த விசித்திர சம்பவம் கடலூரில் அருகே அரங்கேறி உள்ளது.
கடலூர் மாவட்டம் பனங்காடு பகுதியை சேர்ந்தவர் வீரவேலு. இவர் காதலித்து வந்த பெண் இவருக்கு கம்பி நீட்டவே மனம் உடைந்த அவர், திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீரவேலு இறந்த துக்கம் தாளாமல் வயலில் இருந்த உரத்தை சாப்பிட்டு வாழ்வை முடித்து கொள்ள முயன்றுள்ளார் அவரது உயிருக்கு உயிரான நண்பர் சூர்யமூர்த்தி.
தற்கொலைக்கு முயன்று மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை மருத்துவர்கள் தெரிவிக்க சூர்ய மூர்த்தியிடம் விசாரணை மேற்கொண்டது போலீஸ். அப்போது உயிருக்கு உயிராக காதலித்த பெண் இறுதியில் வேறொருவரை திருமணம் செய்து கொண்டதால் விரக்தி அடைந்த வீரவேலு தற்கொலை செய்து கொண்டதாகவும், கூடவே இருந்தும் தற்கொலையை தடுக்க முடியவில்லையே என்று விரக்தியில் தானும் தற்கொலை முயன்றதாகவும் கூறியுள்ளார் சூர்ய மூர்த்தி…
இந்த வாக்கு மூலத்திற்கு பின்புதான் வீரவேலு தற்கொலை செய்து கொண்ட விஷயமே போலீசுக்கு தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், வீரவேலு சடலத்தை உடற்கூராய்வுக்கு உட்படுத்தாமல் அடக்கம் செய்ய கூடாது என்று அறிவுறுத்தினர். இதற்கு உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சிறை செல்ல நேரிடும் என போலீஸார் எச்சரித்ததால் அவர்கள் அமைதியாகினர்.
இதையடுத்து வீரவேலு உடல் உடற்கூராய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சூர்ய மூர்த்தி தன் நண்பரின் காதல் குறித்து ஒரு கதை கூற உறவினர்களிடம் விசாரித்தால் அவர்கள் வேறொரு கதை கூறியுள்ளனர். வீரவேலு தனது உறவுக்கார பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்ததாகவும், ஒரு கட்டத்தில் தைரியம் வந்து காதலை சொல்ல முயலும்போது அவர் வேறொருவரை திருமணம் செய்து கொண்டு ஊரை விட்டு சென்று விட்டதாக கூறியுள்ளனர்.
உறவினர்கள் சொல்வதை நம்புவதா… ? இல்லை உயிர் நண்பன் சொல்வதை நம்புவதா என குழப்பி போய் உள்ளனர் போலீசார். இந்நிலையில் காதலிக்காக உயிர் விட்ட காதலன். நண்பனுக்காக உயிர் விட துணிந்த நண்பன்… அன்பின் முன் உயிரை துச்சமாக எண்ணிய இந்த இரு நண்பர்களை நினைத்து புல்லரித்து போய் கிடக்கிறார்கள் அப்பகுதி வாசிகள்.
Discussion about this post