அதிமுக அரசால் கொண்டுவரப்பட்ட டாக்கட்ர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் டைட்டில் பார்க் ஆகியவற்றை முடக்கும் திமுக அரசை கண்டித்து விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட மாணவர்களின் கல்வி நலனுக்காக டாக்டர்.ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகம் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டது.
மேலும் விழுப்புரம் நகரத்தில் டைடல் பார்க் உருவாக்கப்படும் என அரசாணையும் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் டாக்டர்.ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகம் மற்றும் டைடல் பார்க் ஆகியவற்றை முடக்கும் முயற்சி தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக அரசையும், மாவட்டத்தை சேர்ந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அதிமுக சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, மக்கள் நலன் சார்ந்து அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை முடக்காதே என்று அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பி தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
Discussion about this post