திருப்பதி ஏழுமலையான் கோயிலில், வருடாந்திர பவித்ரோற்சவம் தொடங்கிய நிலையில் கட்டண சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஏழுமலையான் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் வருடாந்திர உற்சவமாக பவித்ரோற்சவம் மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று துவங்கிய பவித்ரோற்சவம், 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளில் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத உற்சவர் மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோயில் மாட வீதிகளில் சாமி ஊர்வலம் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தற்போது ஆன்லைன் சேவைகளாக நடத்தப்படும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவை, கட்டண பிரமோற்சவம் ஆகிய சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
Discussion about this post