அட்டவணை பிரிவினரை இழிவாக பேசிய மீராமிதுன் தன்னை கைது செய்ய முடியாது என்று வீடியோவில் சவால் விட்ட நிலையில், கேரள நட்சத்திர விடுதியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் கதற கதற கைது செய்து அழைத்து சென்றனர்.
பிக்பாஸில் தனது மெல்லிய குரலால் ”என்னை வெளியேற்றி விடுங்கள்” என்று அழுது அடம்பிடித்து 20 நாட்களுக்குள்ளாகவே வெளியேறிய உலகின் ஒரே ஒரு சூப்பர் மாடல் மீரா மிதுன் இன்று நினைத்தாலும் வெளிவர வர முடியாத பிக்பாஸ் வீட்டிற்குள் கதற கதற தூக்கி செல்லப்பட்டுள்ளார்.
அட்டவணை பிரிவினர் குறித்து அருவறுக்க தக்க வகையில் பேசி சர்ச்சையில் சிக்கிய இந்த மல்டிபிள் டிஸாடர் மனிதி, வழக்கு தலைக்கு வந்ததும் கைலாசா அதிபரை போல தலைமறைவாகி வீடியோவில் முகம் காட்டி சவால் விட்டார்.
தான் வளர்க்கும் கலர் கோழி குஞ்சின் மடியின் படித்த படி, ”முடிஞ்சா என்னை புடிடா பாக்கலாம், என்னை கைது செய்ய நினைச்சா அது கனவுல தான் நடக்கும்” என்று பஞ்ச டயலாக் வேறு.
கடுப்பான சைபர் கிரைம் போலீசார், இரண்டே நாட்களில் கேரளாவில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அமுல் பேபி பதுங்கிருப்பதை அறிந்து அவரது அறைக்குள் அதிரடியாக நுழைந்தனர்.
கலர் கோழி குஞ்சுதான் காலிங் பெல் அடித்து விளையாடுகிறது என்ற நினைப்பில்தான் கதவைத் திறந்திருப்பார். ஆனால் காவல்துறை கைவிலங்கோடு நிற்பதை பார்த்ததும் அந்த அரை போதை அழகி அலற தொடங்கினார்.
லட்சோப லட்சம் ரசிகர்கள் அவருக்காக தீக்குளிக்க வரிசையில் நிற்பதை இருப்பதை போல பெண்ணுக்கு பாதுகாப்பே இல்லையா என்றும்,
தன்னை கைது செய்தால் கத்தியால் குத்தி தற்கொலை செய்து கேள்வேன் என்றும் உயிர் போகும் படி ஓலமிட்டு சிறை செல்லும் அந்த கடைசி நொடியிலும் ஒரு வீடியோ போட்டு விட்டுதான் போனார் மீரா எனும் மெண்டல் மனதில்.
ஆனால் போலீசாரோ எத்தனை வீடியோ போடுறியோ… போட்டுட்டு வாம்மா… நாங்க வெயிட் பண்ணி கூட்டிட்டு போறோம் என்று பீப் கறியும் பரோட்டாவும் சாப்பிட்ட தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து தனது மெல்லிசை கூப்பாடு போட்டு கூப்பாடு போட்டு தொண்டை கண்டமாக, வேறு வழியின்றி காவல் துறையினரோடு புறப்பட்டு சென்றது அந்த தமிழகத்தின் செல்ல குரலுக்கான தேடல்.
கட்டாந்தரையே கட்டிலாக, கம்பி இடைவெளியே ஏசியாக அவர் செல்லவிருக்கும் பிக்பாஸ் வீடு இதுவரை அவர் பார்க்காத ஒன்று.
விஜய், சூர்யாவின் வீட்டு அம்மணிகளை வம்பிழுத்த போதே கம்பி எண்ணியிருக்க வேண்டிய இந்த கரித்துணி, அட்டவணை பிரிவு மக்களை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீஸார் நெருங்கியதை அறிந்த மீரா மிதுன், தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும் மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இத்தனை நாட்கள் அவரின் அட்ராசிட்டிகளை பார்த்த மக்கள் அவருக்கு தண்டனை மட்டுமல்ல சிகிச்சையும் சேர்த்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்
Discussion about this post