சுதந்திர தினத்தின் போது கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.
கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்திய ஸ்டாலின், இப்போது அனுமதி மறுப்பது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்டாலினின் செயல்பாட்டை ஆட்சிக்கு முன், ஆட்சிக்கு பின் என ஏட்டில் எழுதி வைக்கும் விதத்தில், கடந்த கால வரலாறுகள் உள்ளன.
தேர்தலில், மக்களை நம்ப வைத்து, கவர்ச்சிக்கர வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, அதனை நிறைவேற்றாமல் டிமிக்கி கொடுத்து வருகிறது.
இதனை கிராம சபா கூட்டங்களில் மக்கள் கேட்டுவிடுவார்களோ? என்ற அச்சத்தில் திமுக அரசு உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தின்போது நடக்கும் கிராம சபை கூட்டங்களுக்கு கொரோனாவை காரணம் காட்டி தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு கொரோனா உச்சத்தில் இருந்தபோது ஊர், ஊராக சென்று மக்கள் கிராம சபை எனும் பெயரில், நட்டாமை செய்த ஸ்டாலின், இந்தாண்டு சுதந்திர தினத்தின்போது கிராம சபை கூட்டம் நடத்த அனுமதிக்காதது ஏன்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஸ்டாலின் பேச்சு… காற்றோடு போச்சு என வாயை பிளந்து சொல்லும் அளவுக்கு அவரது செயல்பாடு மக்களை கடும் கோபத்திற்குள்ளாகி உள்ளது.
Discussion about this post