உள்ளாட்சி தேர்தல் பணிகள் குறித்து 5 மாவட்ட நிர்வாகிகளுடன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் புதிதாகப் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அதிமுக ஆட்சி காலத்தில் நடத்தி முடிக்கப்பட்டது.
வார்டு வரையறைப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட 9 மாவட்டங்களிலும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
முன்னதாக கூட்டம் துவங்கியதும், அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
Discussion about this post